சினிமா

என்ன.. மாங்கனி ஹீரோனுக்கு இந்த இளம் ஹீரோவுடன் காதலா! செம ஷாக்கில் ரசிகர்கள்!!

Summary:

பொதுவாகவே சினிமா துறையில் இருக்கும் பிரபல நடிகை, நடிகைகள் காதலிப்பதாகவும் திருமணம் செய்து

பொதுவாகவே சினிமா துறையில் இருக்கும் நடிகை, நடிகைகள் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொண்டதாகவும் அவ்வப்போது தகவல்கள் பரவி வருவது வழக்கம். இவை சில சமயங்களில் உண்மையானதாக இருக்கும். ஆனால் பலர் அதனை மறுத்து விளக்கமும் அளித்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது நடிகை அனு இம்மானுவேல்  காதலில் விழுந்துள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த துப்பறிவாளன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் நாயகியாக அறிமுகமானவர் அனு இம்மானுவேல். இவருக்கு முதல் படமே நல்ல வரவேற்பு கொடுத்தது. அதனைத் தொடர்ந்து அவர் சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்திருந்தார்.

அனு இம்மானுவேல் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். அவர் தற்போது மகாசமுத்திரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை அனு இம்மானுவேல் தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷை காதலித்து வருவதாக தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் இது உண்மையா? இல்லையா? என்பது குறித்து அவர்கள் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அல்லு சிரிஷ் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் தம்பி ஆவார்.


Advertisement