சினிமா

காசு கிடைக்குனு இப்படியா.! பிக்பாஸ் பிரபலத்துடன், அனிரூத் செய்த காரியத்தால் கடுப்பான ரசிகர்கள்.!

Summary:

anrudh and daniel scolded by fans

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். அவரது இசைக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் அவர் தற்போது பல முன்னணி நடிங்கின் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

anirudh க்கான பட முடிவு

மேலும் தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் டேனியல். மேலும் இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான ம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார். மேலும் இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் கலந்துகொண்டுள்ளார்.

தொடர்புடைய படம்

இந்நிலையில் அனிருத் மற்றும் டேனியல் இருவரும் இணைந்து தற்போது குளிர்பான விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளனர்.  மேலும் இதனை அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.
இதனைத்தொடர்ந்து இந்திய குளிர்பானங்களை வரவேற்க வேண்டும், இந்திய பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பலரும் குரல் எழுப்பினர். மேலும் அந்நிய பொருட்களை பயன்படுத்த கூடாது எனவும் கோரிக்கைகள் ஏற்கப்பட்டது.இந்நிலையில் அனிருத் மற்றும் டேனியல் இருவரும் அந்நிய  பானங்களுக்கு விளம்பரம் செய்வதை ரசிகர்கள் எதிர்த்து வருகின்றனர். மேலும் உங்களை எங்களுக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் தயவுசெய்து இதுபோன்ற விளம்பரங்களில் நடித்து மக்களின் வாழ்க்கையை கெடுக்காதீர்கள் என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பலர் கடுமையாக விளாசியும் உள்ளனர்.


Advertisement