ரிலீசுக்கு முன்பே கோடிகளை அள்ளும் தனுஷின் 'கேப்டன் மில்லர்'.!
தனது கணவர் மற்றும் மாமியாரை பற்றி நெகிழ்ச்சியாக கூறி கண்ணீர் விட்ட பிரபல தொகுப்பாளினி!
தனது கணவர் மற்றும் மாமியாரை பற்றி நெகிழ்ச்சியாக கூறி கண்ணீர் விட்ட பிரபல தொகுப்பாளினி!

பிரபல தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் அனிதா சம்பத்.இவரது அழகிற்கும் இனிமையான பேச்சுக்கும் ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.
இந்நிலையில் அனிதா சம்பத் தற்போது வணக்கம் தமிழா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் இவர் சர்க்கார், வர்மா போன்ற ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அருள் மனோஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் பேட்டியளித்த போது அவரிடம் பல விதமான கேள்விகள் கேட்கப்பட்டன.
அப்போது அனிதாவின் கணவரை பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் வரதட்சணை வாங்கும் இந்த காலக்கட்டத்தில் என் கணவரும், மாமியாரும் வாங்க வில்லை கூறி கண் கலங்கினார். அதுமட்டுமின்றி எங்களது திருமணம் கலப்பு திருமணமாக இருந்த போதிலும் என்னை அவர்கள் அன்புடன் பார்த்து கொள்கிறார்கள் எனவும் கூறினார்.