சினிமா

விஜய்க்கு முன்பே.. முதன்முதலாக பீஸ்ட் படத்தைப் பார்த்தது இவரா?? அட.. நெல்சன் யாருக்கு போட்டு காட்டியுள்ளார் பார்த்தீங்களா!!

Summary:

விஜய்க்கு முன்பே.. முதன்முதலாக பீஸ்ட் படத்தைப் பார்த்தது இவரா??நெல்சன் யாருக்கு போட்டு காட்டியுள்ளார் பார்த்தீங்களா!!

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் தளபதி விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். மேலும் பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளிலும் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இதன் டீசர் அண்மையில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

பீஸ்ட் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு பணிகள் துவங்கி  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இயக்குனர் நெல்சன் பீஸ்ட் படத்தை முழுதாக முடித்தபிறகு முதன் முதலாக அனிருத் மற்றும் அவரது ஸ்டூடியோவில் பணியாற்றும் நபர்களுக்கு தான் போட்டு காட்டியுள்ளார்.மேலும், நெல்சன் அனிருத் சொல்லும் விமர்சனம் தான் தனக்கு கிடைத்த முதல் review என்றும் கூறியுள்ளாராம்.

 


Advertisement