இசையமைப்பாளர் அனிருத்தை கண்கலங்க வைத்த நடிகர் கமல்.! ஏன்? அப்படி என்னதான் செய்தார்??

இசையமைப்பாளர் அனிருத்தை கண்கலங்க வைத்த நடிகர் கமல்.! ஏன்? அப்படி என்னதான் செய்தார்??


Anirudh cry after watching vikram movie

உலக நாயகன் கமல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து தற்போது உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் விக்ரம். இந்த படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரித்துள்ளது.

விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் கௌரவ தோற்றத்தில் சூர்யா ஆகியோர் நடித்துள்ளனராம். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். விக்ரம் படம் வெளியாவதற்கு முன்பு அதன் வெற்றிக்காக நடிகர் கமல் இரவு, பகல் பாராமல் ஒவ்வொரு நாடாகவும், ஊராகவும் பிரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இந்தநிலையில் அண்மையில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றுள்ளது.

vikram

அதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்பொழுது பேசிய அனிருத், கமலின் விக்ரம் படம் எங்களுக்கு ஸ்பெஷலான படம்.  நான் எப்போதுமே படங்களைப் பார்த்து பெருமளவில் எமோசனலாக மாட்டேன். ஆனால் விக்ரம் படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு படம் பார்த்தபோது கமல் சாரின் நடிப்பை கண்டு பிரமித்துவிட்டேன். இதுகுறித்து லோகேஷ் கனகராஜிடம் கூறி கண்கலங்கிவிட்டேன். விக்ரம் படத்தில் பணியாற்றியதை நான் மிகவும் பெருமையாக நினைக்கிறேன் என கூறியுள்ளார்.