அடக்கொடுமையே! அண்டாவ காணோம் படத்திற்கு இப்படியொரு சோதனையா! ஓடிடியில் ரிலீஸ் செய்யவும் தடையா? என்னதான் பிரச்சினை தெரியுமா?

அடக்கொடுமையே! அண்டாவ காணோம் படத்திற்கு இப்படியொரு சோதனையா! ஓடிடியில் ரிலீஸ் செய்யவும் தடையா? என்னதான் பிரச்சினை தெரியுமா?



andava-kanom-movie-release-stopped-in-ott

தமிழில் திமிரு திரைப்படத்தில் வில்லியாக ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ஸ்ரேயா ரெட்டி. இவர் நடிகர் விஷாலின் அண்ணி ஆவார்.  இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்டாவ காணோம். இப்படத்தை வேல்மணி இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் நிலையில் படத்தை ஜே.எஸ்.கே. பிரைம் மீடியா என்கிற ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 28-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது.

Andava kanom

இந்நிலையில் அவுட் டோர் யூனிட் நிறுவனத்தை நடத்திவரும் சங்கையா என்பவர் அண்டாவை காணோம்  திரைப்படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட தடைக் கேட்டு 
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் அவர், அண்டாவ காணோம் படத் தயாரிப்புக்காக அவுட்டோர் யூனிட் உபகரணங்களை சப்ளை செய்துள்ளேன். மேலும்  தயாரிப்பாளர்களுக்கு 25 லட்சம் ரூபாய் கடனும் அளித்துள்ளேன். ஆனால் அவர்கள் வாடகை மற்றும் கடன் தொகையை திருப்பி தரவில்லை.எனவே படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். எனது பணத்தை விரைவில் திருப்பி தரவேண்டுமென கூறியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு பிறகு, நீதிபதி அண்டாவ காணோம் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் உரிய பதிலளிக்க வேண்டும் என கூறி வழக்கை செப்டம்பர் 8-ம் தேதிஒத்தி வைத்துள்ளார்.