சினிமா Bigg Boss

பிக் பாஸ் நிகழ்ச்சியை யாரும் இனி பார்க்கவேண்டாம் - ஆனந் வைத்தியநாதன் அதிரடி

Summary:

anath vaithiyanathan speech in bigboss show

பிக்பாஸ் சீசன்2 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு, மூன்றாவது வாரத்தில் இரண்டாவது போட்டியாளராக வெளியேறியவர் இந்தியாஸ் 'வாய்ஸ் எக்ஸ்பேர்ட்' ஆனந்த் வைத்தியநாதன். 

இவர் தானாகவே முன் வந்து மக்களிடம் தன்னை இங்கிருந்து அனுப்பி விடுமாறு கூறியதால், இவருக்கு மூன்றாவது வாரத்தில் குறைந்த வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இதன் காரணமாக இவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

தற்போது தன்னுடைய அன்றாட வேலைகளில் கவனம் செலுத்தி வரும் வைத்தியநாதன், சமீபத்தில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் பைனல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் நடைபெற்ற ஒரு விழாவில் இவர் கலந்து கொண்டார். அப்போது இவரிடம் செய்தியாளர்கள் பிக் பாஸ் பற்றி ஒரு சில கேள்விகளை எழுப்பினர். 

குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சி கலாச்சார சீரழிவு என்றும் குடும்பத்தோடு நிகழ்ச்சியை பார்க்க முடியவில்லை என்றும் பலர் கூறுகின்றனர், இதனை எப்படி பார்கிறீர்கள்? என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு பதிலளித்த அவர்."கலாச்சார சீரழிவு இருந்தால் குடும்பத்தோடு நிகழ்ச்சியை பார்க்க வேண்டாம்' யாரையும் நிகழ்ச்சியை பார்த்தே தீர வேண்டும் என வற்புறுத்தவில்லை என கூறினார். 

இதை தொடர்ந்து பேசிய இவர் தான் பிக்பாஸ் வீட்டின் உள்ளே மனதளவிலும், உடல் அளவிலும் மிகவும் கஷ்டப்பட்டதாக தெரிவித்துள்ளார்.


Advertisement