ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்புங்க.! அமுதவாணன் செய்த காரியத்தால் கொந்தளித்த நெட்டிசன்கள்.! தீயாய் பரவும் வீடியோ!!

ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்புங்க.! அமுதவாணன் செய்த காரியத்தால் கொந்தளித்த நெட்டிசன்கள்.! தீயாய் பரவும் வீடியோ!!


amuthavaanan-seeing-bathroom-video-viral

பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி நாளுக்கு நாள் விறுவிறுப்பாக, சண்டை, சச்சரவுகளுக்கு பஞ்சம் இல்லாமல் சென்று 45 நாட்களை கடந்துள்ளது. இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளார், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி ஆகியோர் வெளியேறியுள்ளனர். தற்போது பிக்பாஸ் வீட்டில் 15 போட்டியாளர்களே உள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர், மக்கள் மத்தியில் நன்கு பரிச்சயமான அமுதவாணன். அவர் காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். அவர் ஜனனியுடன் சேர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். ஜனனிக்கு பாதுகாப்பாக இருப்பதாக கூறி அவரை ஒரு கைப்பாவையாக மாற்றிவருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அமுதவாணன் போட்டியாளர் ஒருவர் பாத்ரூமில் உள்ளே இருக்க, அமுதவாணன் ஓரமாக நின்று எட்டிப் பார்ப்பது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பின்னர் பிக்பாஸ் அமுதவாணனை மைக் போட கூறியதும் அவர் அங்கிருந்து நகர்கிறார். இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள் அவரை மோசமாக விமர்சித்து வருகின்றனர். மேலும் அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.