சினிமா

பிரமாண்டமாக உருவாகும் பிரபாஸ் படத்தில் இணையும் திரையுலக ஜாம்பவான்! வெளியான தகவலால் செம குஷியில் ரசிகர்கள்!

Summary:

பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்தில் நடிகர் அமிதாப் பச்சன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவிருக்கும் படத்தில் நடிகர் அமிதாப் பச்சன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்ற மகாநடி என்ற வெற்றிப் படத்தை உருவாக்கிய இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் பிரபாஸ் நடிக்கவுள்ளார். 

மேலும் இப்படத்தில் அவருடன் 
ஹீரோயினாக நடிக்க நடிகை தீபிகா படுகோனே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க பல பிரபலங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரபாஸ்21 படம் தொடர்பான முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. 

அதனை தொடர்ந்து இன்று பிரபாஸ் 21 வது படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார்  நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.


Advertisement