அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய ரஜினி, தனுஷ்; வைரலாகும் புகைப்படங்கள்.

america - rajinikanth and family - christmax celepration


america - rajinikanth and family - christmax celepration

குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த். அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாடியுள்ளார். இதற்கான புகைப்படத்தை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் 2.O. இந்நிலையில் மீண்டும் பொங்கலுக்கு வெளியாகும் மற்றொரு படம் பேட்ட. இவ்விரண்டு படங்களின் தொடர் படப்பிடிப்பு மற்றும் அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பான வேலைகள் என தொடர்ந்து பிசியாக இருந்து வந்தார் ரஜினிகாந்த்.

இந்நிலையில் தற்போது ஓய்வு எடுப்பதற்காக தனது குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடியுள்ளார். அவரும் மருமகன் தனுஷ்ம் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.