விஜய் சேதுபதி படத்திலிருந்து அதிரடியாக விலகிய பிரபல நடிகை.! இதுதான் காரணமா?

விஜய் சேதுபதி படத்திலிருந்து அதிரடியாக விலகிய பிரபல நடிகை.! இதுதான் காரணமா?


amala-paul-leave-from-vijay-sethupathi-movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் குறுகிய காலத்திலே பல திரைப்படங்களில் நடித்து வெற்றி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் அவர் தற்பொழுது இயக்குநர் எஸ்பி ஜனநாதன் இணை இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகநாத் உருவாக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் பழனியில் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க அமலாபால் ஒப்பந்தமாகியிருந்தார் . 

vijay sethupathi

இந்நிலையில் அமலாபால் திடீரென படத்திலிருந்து விலகி விட்டதாகவும், அதற்கு பதில் மேகா ஆகாஷ் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.இந்நிலையில் படத்திலிருந்து விலகியது குறித்தும், அதற்கான காரணம் குறித்தும் விளக்கம் அளித்தும் அமலா பால் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 



 

அதில் இப்படத்திற்காக மும்பை  சென்றபோது நான் தனிப்பட்ட செலவில் ஷாப்பிங் செய்தேன் ஆனால் தயாரிப்பு நிறுவனம் அதற்கு முனுமுனுத்துக் கொண்டே இருந்தனர். மேலும் நான் இந்த படத்தில் நடிப்பது பிடிக்கவில்லை என்றும் தயாரிப்பாளர் எனக்கு தகவல் அனுப்பியிருந்தார்.

மேலும் ஆடை படத்தின் டீசரை பார்த்த பிறகுதான் தம்பி என்னை படத்திலிருந்து நீக்கி இருப்பார்கள் என நினைக்கிறேன். மற்றபடி விஜய் சேதுபதிக்கும், எனக்கும்  எந்த பிரச்சினையும் இல்லை.  நான் தற்பொழுதும் அவரது ரசிகை தான் என குறிப்பிட்டுள்ளார்.