புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து விலகுகிறாரா காவியா?? புதிய முல்லையாக நடிக்கப்போவது இவரா! ஷாக்கில் ரசிகர்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஏராளமான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று வருகிறது. அவ்வாறு மக்களைக் கவர்ந்த தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்தத் தொடரில் முல்லை கதாபாத்திரம் அனைவராலும் பெருமளவில் ரசிக்கப்பட்டு பிரபலமடைந்தது.
இதில் முதலில் முல்லை கதாபாத்திரத்தில் விஜே சித்ரா நடித்து வந்தார். ஆனால் அவர் நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதை தொடர்ந்து தற்போது காவியா அறிவுமணி முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரும் தற்போது ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளார்
இந்த நிலையில் தற்போது காவியாவிற்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதால், அவர் பாண்டியன் ஸ்டோர் தொடரில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளிவருகிறது. மேலும் அவருக்கு பதில் ஆலியா மானசா நடிக்க உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் தீயாய் பரவி வருகிறது. ஆனால் இந்தத் தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.