சிகிச்சைக்குப் பிறகு ஆல்யா மானசாவின் தற்போதைய நிலை பற்றி கூறிய சஞ்சீவ்... மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

சிகிச்சைக்குப் பிறகு ஆல்யா மானசாவின் தற்போதைய நிலை பற்றி கூறிய சஞ்சீவ்... மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!


Alaya latest health update

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை  பெற்ற ராஜாராணி தொடரில் கார்த்தி மற்றும் செம்பா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆல்யா. ராஜாராணி தொடரில் கணவன், மனைவியாக நடித்து வந்த இருவரும் நிஜத்திலும் காதலிக்க தொடங்கி திருமணம் செய்து கொண்டனர். 

இவர்களுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஐலா என்று பெயர் வைத்தனர். இந்நிலையில் தற்போது ஆல்யா மற்றும் சஞ்சீவ்க்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தைக்கு அவர்கள் அர்ஷ் என்று பெயர் வைத்துள்ளனர்.

Alaya

ஆல்யா மீண்டும் தனது உடல் எடையை குறைத்து சன் டிவியில் இனியா என்ற தொடரில் நடித்து வந்தார். இந்நிலையில் தான் ஆல்யாவுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் அவரது கால் எழும்பு முறிவு ஏற்பட கட்டு போட்டு நடக்க முடியாமல் இருந்தார். நேற்று அவருக்கு காலில் சர்ஜரி நடந்துள்ளது, தற்போது அவரது சர்ஜரி நல்லபடியாக முடிந்துள்ளது என்றும் விரைவில் அவர் அதில் இருந்து மீண்டும் வருவார் என ஆல்யாவின் கணவர் சஞ்சீவ் மகிழ்ச்சியான செய்தியை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கூறிப்பிட்டுள்ளார்.