அஜித்- ஷாலினி வாழ்வில் இன்று மறக்கமுடியாத மிகவும் முக்கியமான நாள்! ஏன் தெரியுமா?

அஜித்- ஷாலினி வாழ்வில் இன்று மறக்கமுடியாத மிகவும் முக்கியமான நாள்! ஏன் தெரியுமா?


ajith-shalini-wedding-day

தமிழ் சினிமாவில் 1999ம் ஆண்டு வெளியான அமர்க்களம் படத்தில்  ஜோடியாக நடித்ததன் மூலம் ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர்கள் அஜித்-ஷாலினி.  இருவரும் கடந்த 2000வது ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர். மேலும் அன்றுமுதல் இன்றுவரை  சிறந்த காதல் ஜோடியாக திகழ்ந்து வருகின்றனர்.

Ajith

மேலும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல வெற்றி படங்களில் நடித்த ஷாலினி திருமணத்திற்கு பின்னர் திரையுலகை விட்டு விலகி தனது  கணவர் அஜித்தின் தோல்வியிலும், வெற்றியிலும் ஒன்றாக  கைக்கோர்த்து சிறந்த மனைவியாக இருந்து வருகிறார்.

Ajith

மேலும் தற்போது திருமணம் ஆகி 19 ஆண்டுகள் ஆன நிலையில் அவர்களுக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் குமார் என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.இவ்வாறு சிறந்த தம்பிகளாக திகழ்ந்து வரும் அஜித் ஷாலினி ஜோடி இன்று தங்களது திருமண நாளை கொண்டாடினர். அவர்களுக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Ajith

மேலும் தல ரசிகர்கள்இவர்களை #HappyWeddingDayAJITHSHALINI என்ற ஹேஷ் டேக்கில் வாழ்த்தி மகிழ்கிறார்கள்.