மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
தல 61 ஸ்பெஷல்.! 4 இளம்பிரபலங்களை அதிரடியாக தேர்ந்தெடுத்த அஜித்!! யார்யார் எதற்காக தெரியுமா?
தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பார்ப்பவர் தல அஜித். இவருக்கென தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இவருக்கு பல பிரபல நடிகர், நடிகையர்களே பெரும் ரசிகர்களாக உள்ளனர். மேலும் அவருடன் நடிக்க பல நடிகைகளும் காத்திருக்கின்றனர்.
அதுமட்டுமின்றி இவரது ஒவ்வொரு படங்கள் வெளியாகும் நாட்களையும், அவரது பிறந்தநாளையும் ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் நேர்கொண்ட பார்வை. அப்படத்தில் அஜித் வழக்கறிஞராக நடித்திருந்தார். பெண்கள் சுதந்திரம் மற்றும் பெண்களுக்கு எதிரான பிரச்சினைகள் குறித்து உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் அஜித் இனி வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக தற்போது வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அதனை தொடர்ந்து அஜித் இளம் இயக்குனர்களுடன் கைகோர்க்கவுள்ளார்.
மேலும் அதற்காக அவர் விக்ரம் வேதா படம் எடுத்த புஷ்கர்-காய்த்ரி மற்றும் கார்த்திக் நரேனிடம் கதை கேட்டுள்ளாராம். மேலும் அவர்களை தொடர்ந்து மாயா இயக்குனர் அஷ்வின், இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் ஆகியோரிடமும் கதை கேட்கவுள்ளார். இவர்களில் ஒருவரின் கடையை தேர்ந்தெடுத்து அஜித் அடுத்ததாக நடிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.