தல எப்பவுமே வேற லெவல்தான்! என்னவொரு மனசு.. வீடியோவை கண்டு புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!!

தல எப்பவுமே வேற லெவல்தான்! என்னவொரு மனசு.. வீடியோவை கண்டு புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!!


ajith-return-mobile-and-ask-sorry-to-fan

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் துவங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் திரையுலகப் பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

தல அஜித் மற்றும் ஷாலினி இருவரும் திருவான்மியூரில் தங்களது வீட்டிற்கு அருகில் உள்ள வாக்குச்சாவடியில் காலையிலேயே வாக்களித்தனர். அங்கு அவரை கண்டதும் ரசிகர்கள் கோஷமிட்டு ஆரவாரம் செய்து அவருடன் செல்பி எடுக்க முயன்றனர். மேலும் அப்பகுதியில் கூட்டம் கூடியது. இந்நிலையில் ரசிகர் ஒருவர் முககவசம் அணியாமல் தல அஜித்துடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார்.

இதனால் கடுப்பான அஜித் அவரது செல்போனை பிடுங்கி தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டு அங்கிருந்து அவர்களை போக சொன்னார். பின்னர் வாக்குச்சாவடியில் செல்போனை பயன்படுத்த கூடாது. மாஸ்க் அணியுங்கள். சாரி என மன்னிப்பு கேட்டு செல்போனை திருப்பிக் கொடுத்துள்ளார். மேலும் அங்கிருந்த சிலரிடமும் சாரி கேட்டு விட்டு சென்றுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக தல எப்பொழுதுமே வேற லெவல் தான் என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.