தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.. அசத்தல் அழகு.! இளசுகளை சொக்கி இழுக்கும் நடிகை பிரியா வாரியர்.!
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மோத விரும்பாத தல அஜித்.! என்ன காரணம்.? வியப்பில் ரசிகர்கள்.!

தல அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் இந்த படம் தீபாவளி அல்லது கிறிஸ்மஸ் ஆகிய இரண்டு தினங்களில் ஒன்றில் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.
இந்தநிலையில், வலிமை திரைப்படம் அடுத்த 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தீபாவளிக்கு வலிமை படம் ரிலீசாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில், தயாரிப்பாளரின் அறிவிப்பு ரசிகர்களிடையே சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படத்தை தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4-ம் தேதி வெளியிட தயாரிப்பாளர் திட்டமிட்டு இருந்தார் என கூறப்பட்டது, ஆனால் அந்த தேதியில் வெளியிட வேண்டாமென அஜித் வலியுறுத்தியுள்ளதக தகவல் வெளியாகி உள்ளது. அதற்க்கு இரண்டு காரணங்கள் உள்ளன என கூறப்படுகிறது. முதல் காரணம் அதே தேதியில் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் வெளியாகிறது.
2019 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்கள் வெளியாகின. இதனால் இருவரின் ரசிகர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கடுமையான வார்த்தைகளால் சாடிக்கொண்டனர். இதனால் உச்சத்தில் உள்ள நடிகரை ரசிகர்கள் விமர்சனம் செய்வதை அஜித் விரும்பபில்லை என கூறப்படுகிறது. அடுத்ததாக அந்தப் படத்தை அஜித்தின் நண்பர் சிவா இயக்கியுள்ளார். இந்த இரண்டு காரணங்களாலே வலிமை படத்தை தீபாவளிக்கு வெளியிட வேண்டாம் என்று அஜித் கூறியதாக கூறப்படுகிறது.