சினிமா

தல அஜித்தா இது? வாயடைத்து போன ரசிகர்கள்! இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா?

Summary:

Ajith new look photos goes viral

இந்த வருடம் தல அஜித்துக்கு மிகப்பெரிய சந்தோஷமான வருடம் என்றே கூறலாம். இந்த வருடத்தின் தொடக்கத்தில் வெளியான விஸ்வாசம் படமும் சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.

தற்போது நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து மீண்டும் இயக்குனர் வினோத் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார் அஜித். இந்த படத்தில் அஜித் போலீசாக நடிக்க இருப்பதாகவும், கார் ரேஸராக நடிக்க இருப்பதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகிவருகின்றன.

மேலும், சமீப காலமாக மேக்கப் எதுவும் இல்லாமல், சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டெயில் நடித்துவந்த அஜித் அதனது அடுத்த படத்தில் இளமை தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இதனால் அஜித் தனது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்துக்கு மாறியுள்ளதாக புகைபடங்கள் வெளியாகின.

இந்நிலையில் சமீபத்தில் அஜித்தை விமான நிலையத்தில் பார்த்த அவரது ரசிகர்கள் அவருடன் புகைப்படம், வீடியோ எடுத்து அதை வைரலாகிவருகின்றனர். அதில் அஜித் மீண்டும் இளமை தோற்றத்திற்கு திரும்பியுள்ளதை பார்க்க முடிகிறது. இதோ அந்த புகைபடங்கள். 


Advertisement