மலையாள நடிகர் மோகன்லால் விடாமுயற்சி படத்தில் நடிக்கிறாரா.? வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் குழப்பம்.!

மலையாள நடிகர் மோகன்லால் விடாமுயற்சி படத்தில் நடிக்கிறாரா.? வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் குழப்பம்.!


Ajith Kumar Met popular actor in Dubai

அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் என்றாலே நம் நினைவுக்கு வருவது அவரின் அழகிய முகம் . அதை தவிர்த்து மக்களிடையே அவர் பிரபலமாக இருக்கும் மற்றொரு விஷயம் கார் ரேஸ் . ஆனால் சமீப காலமாக அவர் பைக்கில் பயணம் செய்வதை பொழுதுபோக்காக கொண்டுள்ளார் .

Ajith

சினிமா படப்பிடிப்பு நேரங்களைத் தவிர தனக்கு கிடைக்கும் நேரங்களை பல நாடுகளுக்கு பைக்கில்  செல்வதில் செலவிடுகிறார் அஜித்குமார். அவர் ஓமன் நாட்டிற்கு சென்று எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாகி கொண்டிருக்கின்றன .

அதேபோல் அஜித்குமார் அவர்கள் துபாயில் இருக்கும் "புர்ஜ் கலிஃபா" சென்றபோது அங்கே பிரபல மலையாள நடிகர் திரு மோகன்லால் அவர்களை சந்தித்துள்ளார். தமிழில் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் எவ்வளவு பிரபலமும் அதேபோல் மலையாளத்தில் திரு மோகன்லால் அவர்கள் புகழ் பெற்றவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே .

Ajith

அப்படி இருக்கையில் இருவரும் அவர்கள் வீட்டில் சகஜமாக சந்தித்து நட்பை பரிமாற்றிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக அஜித் அவர்கள் தற்பொழுது "விடாமுயற்சி" திரைப்படத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. வைரலாகும் இப்புகைப்படத்தால் மோகன்லால் அவர்கள் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்கிறார்களா என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.