சினிமா

காணவில்லை... அப்டேட்டு கொடு... இல்ல ஃபர்ஸ்ட்லுக்கை விடு... வெயிட்டிங்கே வெறியேறுது பங்கு.... அட்ராசிட்டி பண்ணும் அஜித் ரசிகர்கள்

Summary:

வலிமை படத்தின் அப்டேட் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் இல்லாதநிலையில் அஜித் ரசிகர்கள் பலவிதமான வாக்கியங்களுடன் போஸ்டர் அடித்து ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

வலிமை படத்தின் அப்டேட் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் இல்லாதநிலையில் அஜித் ரசிகர்கள் பலவிதமான வாக்கியங்களுடன் போஸ்டர் அடித்து ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துவரும் திரைப்படம் வலிமை. கொரோனா ஊரடங்கு காலத்திற்கு முன் தொடங்கப்பட்ட படப்பிடிப்பு அதன் பின் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் கடந்த பல மாதங்களாக படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டையும் படக்குழு வெளியிடாமல் இருந்தநிலையில், படத்தின் முக்கிய அப்டேட் குறித்து தீபாளிக்கு ஏதேனும் வெளியாகலாம் என காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இதனால் கடுப்பான ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு மதுரையில் தல ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

அந்த போஸ்டர்களில், காணவில்லை. போனிகபூர் அவர்களே, கடந்த 8 மாதங்களாக வலிமை படத்தின் அப்டேட் காணவில்லை எனவும், வேறு சில இடங்களில், கொய்யால ஒன்னு வலிமை அப்டேட் கொடு.. இல்ல ஃபர்ஸ்ட் லுக் விடு.. வெயிட்டிங்கே வெறியேறுது பங்கு.. என்ற வசங்களுடன் வெறித்தனமாக போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

 


Advertisement