சினிமா

வாவ்! தல அஜித் மற்றும் ஷாலினியா இது! இந்த மாதிரியான வேற லெவல் கெட்டப்பில் யாராவது பார்த்துருக்கீங்களா! வைரலாகும் அரிய கியூட் புகைப்படம்!

Summary:

தல அஜித் மற்றும் ஷாலினி இருவரும் பிரிட்டிஷ் இளவரசர் மற்றும் இளவரசி போன்ற உடையணிந்த புகைப்படம் வைரலாகி வருகிறது .

தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் தல அஜித். இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இவரது பிறந்தநாள் மற்றும் படங்கள் வெளியாகும் நாட்களை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடி வருவர்.

இந்நிலையில் நடிகர் அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அமர்க்களம் படத்தில் நடித்தபோது அஜித் மற்றும் ஷாலினி இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அனோஷ்கா, ஆத்விக் என இரு குழந்தைகள் உள்ளனர்.

நடிகர் அஜித் முன்பெல்லாம் சினிமா ப்ரோமோஷன் மற்றும் இசை வெளியீட்டு விழாக்களில் கலந்து கொண்டார். பின்னர் நாளடைவில் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை. இவ்வாறு அஜித் மற்றும் ஷாலினி இருவரும் பிரிட்டிஷ் இளவரசர் மற்றும் இளவரசி போன்ற உடையணிந்து  நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளனர். அந்த அரிய புகைப்படம் தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

<p>அப்படி சில வருடங்களுக்கு முன்பு அஜித், ஷாலினி பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றின் போட்டோஸ் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. </p>


 


Advertisement