சினிமா

அஜித் 61 படத்தில் அஜித்தின் கெட்டப் இதுதானா... செம மாஸ்.. வைரல் புகைப்படம்.!

Summary:

அஜித் 61 படத்தில் அஜித்தின் கெட்டப் இதுதானா... செம மாஸ்.. வைரல் புகைப்படம்.!

அஜித் தமிழ் சினிமாவில் கொண்டாடக்கூடிய நடிகர்களுள் ஒருவர். தல அஜித் என சொல்லப்படும் அஜித்திற்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அஜித் கடைசியாக நடித்த நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித், வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துள்ளார். 

வலிமை படத்தையும் போனி கபூர் தான் தயாரித்துள்ளார். இந்நிலையில் மூன்றாவது முறையாக அஜித் மற்றும் வினோத் இருவரும் அஜித் 61 படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதுமட்டுமின்றி அஜித் 61 படத்தையும் போனி கபூரே தயாரிக்கவுள்ளாராம். இப்படத்தின் வேலையை வலிமை ரிலிஸ்க்கு பிறகு தொடங்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் தற்போது அஜித் 61 படத்தில் அஜித்தின் கெட்டப்பை சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement