ஐஸ்வர்யா ராஜேஷின் அம்மா இவங்கதானா.. அம்மாவின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. நீங்க பாத்துட்டீங்களா?Aishwarya Rajesh Mother Photos

தனது அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமாக உள்ள நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷும் ஒருவர். அழகு, கவர்ச்சி இருந்தால்தான் நாயகி ஆக முடியும் என்பவர்கள் மத்தியில், தனது விடா முயற்சி, திறமை இவற்றை வைத்து மட்டுமே முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

Aishwarya rajesh

இவர் நடித்த ஏராளமான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நாயகியாக மட்டும்தான் நடிப்பேன் என்று இல்லாமல், இரண்டு குழந்தைகளுக்கு அம்மா, தங்கச்சி கதாபாத்திரம், இப்படி கிடைக்கும் பந்துகளையெல்லாம் சிக்ஸர் அடித்து ஜொலித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

தற்போது பூமிகா, திட்டம் இரண்டு, துருவ நட்சத்திரம், இது வேதாளம் சொல்லும் கதை, இடம் பொருள் ஏவல் என அடுத்தடுத்த படங்களில் நடித்துவருகிறார் அம்மணி. இந்நிலையில் தனது அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தனது தாயாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், தனது அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு, இன்று நான் இப்படி இருக்க அதற்கு நீங்கள்தான் காரணம் எனவும், எப்போதும் உங்களை விரும்புவதாகவும் பதிவிட்டுள்ளார்.