அடேங்கப்பா.. இரண்டாவது படத்திற்கேவா.! மாவீரன் படத்திற்கு அதிதி ஷங்கர் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா??

அடேங்கப்பா.. இரண்டாவது படத்திற்கேவா.! மாவீரன் படத்திற்கு அதிதி ஷங்கர் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா??


aditi-shakar-salary-for-maaveeran-movie

இந்திய திரையுலகில் பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் ஷங்கர். அவரது மகள் அதிதி ஷங்கர். அவர் தற்போது சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்து, முத்தையா இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் உருவாக்கியுள்ள விருமன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார்.

இப்படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் அதிதி கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார். அதனை தொடர்ந்து அவர்  மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகவுள்ள மாவீரன் படத்தில் நடிக்க உள்ளார்.

Aditi shankar

இப்படத்தில் ஹீரோவாக முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.  இந்நிலையில் அதிதி ஷங்கருக்கு வழங்கப்பட்டுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அதிதி ஷங்கருக்கு அறிமுக படமான விருமன் படத்திற்கே 10 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாம். அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்தில் நடிப்பதற்கு 25 லட்சம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.