முத்து படத்தில் நடித்த நடிகை விசித்ராவா இது?? அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிட்டாரே..!! வைரலாகும் புகைப்படம்..

முத்து படத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகை விசித்திராவின் தற்போதைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் ஒருசில படங்களில் கவர்ச்சி கதாபாத்திரத்திலும், கவுண்டமணி, செந்தில், வடிவேலு என முன்னணி நகைச்சுவை நட்சத்திரங்களுடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடுத்துவந்தவர் நடிகை விசித்ரா.
குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த முத்து படத்தில் இவரது கதாபாத்திரம் இன்றுவரை பிரபலம். சினிமாவில் துணை காதாபாத்திரம், காமெடி, கவர்ச்சி என நடித்துவந்த இவர், சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால் சீரியல் பக்கம் தாவினார். ஆனால் அங்கும் இவருக்கு போதிய வரவேற்பு இல்லாததால் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார்.
தற்போது தனது குடும்பத்துடன் புனேவில் வசித்துவரும் இவர், விரைவில் புது சீரியல் ஒன்றில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இவரது தற்போதய புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.