"கணவருக்கு ஏற்பட்ட விபத்து! தனியாளாக போராடினேன்!" நடிகை வினோதினி கண்ணீர் பேட்டி!

1982ம் ஆண்டு "மணல் கயிறு" படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் வினோதினி. இதையடுத்து மேலும் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், 1992ம் ஆண்டு பாலு மகேந்திராவின் "வண்ண வண்ண பூக்கள்" படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதையடுத்து தமிழில் உடல் பொருள் ஆனந்தி, சித்தி, அகல்விளக்கு, கண்ணாடிக்கதவுகள், விடாது சிரிப்பு, குடும்பம், விரோதி, சிரி சிரி கிரேசி போன்ற தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்களிலும், சகவாசம் என்ற மலையாளத் தொடரிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த வினோதினி, "என் கணவர் ஒரு முறை விபத்தில் சிக்கினார். இரண்டு பேர் பைக்கில் வந்து அவர் மீது மோதி விபத்து ஏற்படுத்திவிட்டு, பத்தாயிரம் ரூபாயை அபராதமாகக் கட்டிவிட்டு சென்றுவிட்டனர்.
இந்த நாட்டில் நம் வாழ்க்கையின் மதிப்பு இதுதானா என்று அப்போது தோன்றியது. அப்போது நான் யாருடைய உதவியும் இன்றி தனியாளாகத் தான் போராடினேன். என் குடும்பத்துக்காக நான் மட்டுமே இருந்தேன். என் கணவரைக் காப்பாற்றி விடவேண்டும் என்ற எண்ணம் தான் இருந்தது" என்று கண்ணீருடன் கூறினார்.