சினிமா

நானே சொல்றேன்! அதுவரைக்கும் கவனமாக இருங்க! அவசர அவசரமாக நடிகை வரலக்ஷ்மி விடுத்த அறிக்கை என்ன விஷயம் தெரியுமா?

Summary:

நடிகை வரலட்சுமியின் சமூக வலைதளப்பக்கம் மர்மநபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர் சிம்புவுடன் இணைந்து போடா போடி படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக பிரபலமானவர் நடிகை வரலட்சுமி. இவர் முன்னணி நடிகரான சரத்குமாரின் மகள் ஆவார். அதனைத் தொடர்ந்து அவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தளபதி விஜய்யின் சர்க்கார் மற்றும் விஷால் நடிப்பில் வெளிவந்த சண்டக்கோழி-2 படத்தில் கொடூர வில்லியாக நடித்து ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார்.

சமீபத்தில் வரலட்சுமி நடிப்பில் உருவான டேனி  திரைப்படம் கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் திறக்கப்படாத நிலையில் ஓடிடி தளத்தில் வெளியானது. மேலும் சேசிங், கிராக் மற்றும் கன்னிராசி போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது. நடிகை வரலட்சுமி கொரோனா காலத்தில், வறுமையில் வாடியவர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் என பெருமளவில் சிரமப்பட்ட பலருக்கும் ஏராளமான உதவிகளை செய்துள்ளார். மேலும் எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் அவர் பாலியல் வன்முறை, கொரோனா விழிப்புணர்வு என பல கருத்துக்களை கூறி வந்தார்.

மர்ம நபர்களிடம் சிக்கிய வரலட்சுமி சரத்குமார்... அறிக்கை வெளியீடு || Tamil  cinema varalakshmi twitter hacked

இந்த நிலையில் நடிகை வரலட்சுமியின் சமூக வலைதளப்பக்கம் மர்மநபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "என்னுடைய இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் சமூக வலைதளப் பக்கங்கள் நேற்று இரவு திருடப்பட்டுள்ளது. என்னால் இன்னும் அவற்றை மீட்க முடியவில்லை. என்னுடைய கணக்குகளை மீட்பதற்காக அந்தத் தளங்களின் அதிகாரிகளுடன் பேசி வருகிறேன்.அதற்கு சில நாட்களாகலாம்.

என்னைப் பின்தொடர்பவர்கள் சில நாட்களுக்கு என்னுடைய இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கங்களிலிருந்து மெசேஜ் வந்தால், தயவுசெய்து கவனமாக இருக்கவும். என்னுடைய கணக்குகளை மீட்டதும் நான் அதுகுறித்து உங்களுக்குத் தெரிவிப்பேன். உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி என அறிக்கை வெளியிட்டுள்ளார்.


 


Advertisement