சினிமா

நடிகை த்ரிஷாவா இது? யாரும் பார்த்திராத சிறுவயது புகைப்படம்!

Summary:

Actress thrisha childhood photos goes viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை த்ரிஷா. விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடிசேர்ந்து நடித்துவிட்டார் த்ரிஷா.

தொடர்ந்து பல வருடங்களாக தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திவரும் நடிகை த்ரிஷா தற்போது வாய்ப்புகள் இன்றி தவித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 96 திரைட்படம் மாபெரும் வெற்றிபெற்றது. தனி ஒரு நடிகையாக தனது ஆதிக்கத்தை செலுத்த விரும்பும் த்ரிஷாவரிக்கு அதற்கான வாய்ப்புகள் சரிவர அமையாமல் போகிறது.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகிவரும் பேட்ட திரைப்படத்தில் நடிக்கிறார் நடிகை திரிஷா. இந்நிலையில், நடிகை திரிஷாவின் ரசிகர்கள் அவரின் சிறுவயது புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

சிறுவயதில் இருக்கும் அதே முகம் இன்று அவருக்கு உள்ளதாகவும், எப்போதும் நடிகை த்ரிஷா இளமையுடன் இருக்கவேண்டும் என்றும் அவர்களது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Advertisement