சுப்ரமணியபுரம் நடிகை சுவாதியின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? வாய்ப்புகள் இல்லாததால் அவர் எடுத்த அதிர்ச்சி முடிவு!



actress-swathi-reddy-marriage-photos-and-her-current-st

சுப்ரமணியபுரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை சுவாதி. அதை தொடர்ந்து பலப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் எந்த திரைப்படமும் இவருக்கு சரியாக காய் கொடுக்க வில்லை.

நீண்ட நாட்களாக வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்த நடிகை சுவாதி, கடந்த 30ம் தேதி தனது நீண்ட நாள் நண்பரான விகாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Swathi reddy
கடைசியாக தமிழில் வெளியான ‘ஆண்டவன் கட்டளை’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஸ்வாதி நடித்திருந்தார். மணமகன் விகாஸ், சர்வதேச விமான ஓட்டியாக பணிபுரிகிறார். நாளை கொச்சினில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்துக் கொள்கிறார்களாம்.


விகாஸ் இந்தோனேஷியாவிலுள்ள ஜகார்தாவைச் சேர்ந்தவர் என்பதால், திருமணத்திற்குப் பிறகு ஸ்வாதியும் ஜகார்தாவிலேயே செட்டில் ஆகிறாராம்.

Swathi reddy