நடிகை சுதா சந்திரன் வீட்டில் நேர்ந்த துயரம்! சோகத்தில் மூழ்கிய குடும்பத்தார்கள்! ஆறுதல் கூறும் ரசிகர்கள்!!

நடிகை சுதா சந்திரன் வீட்டில் நேர்ந்த துயரம்! சோகத்தில் மூழ்கிய குடும்பத்தார்கள்! ஆறுதல் கூறும் ரசிகர்கள்!!



actress-sudhachadran-father-dead

தமிழ் சினிமாவில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த மயூரி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சுதா சந்திரன். இவர் சர்வம் சக்திமயம், தர்மம், நம்பினார் கெடுவதில்லை, வசந்தராகம் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 

மேலும், அவர் விக்ரம் நடிப்பில் வெளிவந்த சாமி 2 திரைப்படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி சுதா சந்திரன் பல பிரபல தொலைக்காட்சி சீரியல்களிலும் அசத்தலாக நடித்துள்ளார். மேலும் அவர் ஹிந்தி தமிழ் டப்பிங்கான நாகினி தொடரிலும் வில்லியாக நடித்திருந்தார்.

sudhachadranஇவ்வாறு ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமான அவரது தந்தை சந்திரன், பல படங்களில் நடித்துள்ளார். 86 வயது நிறைந்த சந்திரன் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்துள்ளார். இந்த தகவல் வெளியான நிலையில்  இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.