சினிமா

அட.. பார்ப்பதற்கு அப்படியே நடிகை அஞ்சலி மாதிரியே இருக்காரே! பிரபல இளம் நடிகையின் புகைப்படத்தை கண்டு ஷாக்கான நெட்டிசன்கள்!!

Summary:

நடிகை சுபிக்ஷா பார்ப்பதற்கு நடிகை அஞ்சலியை போல இருப்பதாக கூறி வருகின்றனர்.

நடிகை சுபிக்ஷா பார்ப்பதற்கு நடிகை அஞ்சலியை போல இருப்பதாக கூறி வருகின்றனர். தமிழ் சினிமாவில் வேட்டை நாய் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சுபிக்ஷா. அதனைத் தொடர்ந்து அவர் கடுகு, கோலிசோடா 2 உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். 

இந்த நிலையில் தற்போது கொரோனா இரண்டாவது அலையாக பெருமளவில் பரவிய நிலையில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சுபிக்ஷா உணவின்றி தவிக்கும் சாலையோர மக்களுக்கு மற்றும் கால்நடைகள் போன்றவற்றிற்கு உணவளித்து உதவி செய்து வந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி அவரை பலரும் பாராட்டினர்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் அவர் குட்டி டவுசரில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனைக் கண்ட நெட்டிசன்கள் நடிகை சுபிக்ஷா பார்ப்பதற்கு அப்படியே நடிகை அஞ்சலி போல இருப்பதாகவும், குட்டி அஞ்சலி எனவும் கூறிவருகின்றனர்.


Advertisement