அச்சச்சோ.. விஜயகாந்துக்கு ரொம்ப கோவம் வரும்., அடிப்பாரு - மிரண்டு படத்தில் நடிக்க மறுத்த தமிழ் நடிகை..!!

அச்சச்சோ.. விஜயகாந்துக்கு ரொம்ப கோவம் வரும்., அடிப்பாரு - மிரண்டு படத்தில் நடிக்க மறுத்த தமிழ் நடிகை..!!


actress-soundarya-fear-with-act-vijayakanth

 

தமிழ் திரையுலகில் நன்மதிப்பை பெற்ற மூத்த நடிகர் விஜயகாந்த். இவர் நடிப்பது மட்டுமல்லாது அனைவரையும் அன்போடு வழிநடத்தும் தலைவராகவும் இருந்தார். அரசியல் பக்கம் திரும்பிய பின்னர் முதலில் வளர்ச்சி பின் வீழ்ச்சி என அவரின் வாழ்க்கை தடுமாறி போனது.

தற்போது உடல்நலக்குறைவால் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். கருப்பு எம்.ஜி.ஆர் என்று வருணிக்கப்பட்ட விஜயகாந்த், திரைஉலகினருக்கு பேருதவிகளை செய்தவர். 

விஜயகாந்த் பார்க்க கோபமானவர் போல தோன்றினாலும், மனதளவில் மென்மையானவர். அவரை பார்த்து நடிகை ஒருவர் பயந்த சம்பவம் தெரியவந்துள்ளது. கடந்த 2004ல் ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த நடிகை சௌந்தர்யா, முதலில் விஜயகாந்துடன் நடிக்க மறுப்பு தெரிவித்தார்.

விஜயகாந்த் கோபமானவர், படப்பிடிப்பில் அவர் அடிப்பார் என தெரிவித்த நிலையில், இதனையறிந்த விஜயகாந்த் அவர் படப்பிடிப்பிற்கு சும்மா வந்து பார்த்து செல்லட்டும் என தெரிவித்துள்ளார். பின்னாட்களில் நடிகை சௌந்தர்யாவும் விஜயகாந்தின் கோபத்திற்கு பின் உள்ள குணத்தை புரிந்துகொண்டு தவறுக்கு மன்னிப்பு கேட்டு நடிக்க தொடங்கியுள்ளார்.