சினிமா

மரணத்தில் இருந்து மீண்டு வந்த பிரபல நடிகை! மீண்டும் சினிமாவில் இறங்க அதிரடி முடிவு!

Summary:

Actress sonali bendre back to cinema

பலவருடங்களுக்கு முன்பு வெளியான படங்களில் ஒருசில படங்கள் இன்றுவரை மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றுள்ளது. அதில் ஒரு திரைப்படம்தான் காதலர் தினம். நடிகர் குணால் நடிப்பில் கதிர் இயக்கத்தில் வெளியான இந்த படம் மாபெரும் வெற்றிபெற்றது. படத்தின் வெற்றிக்கு மிக முக்கியகாரணமாக இருந்தது AR ரஹ்மான் இசையில் உருவான பாட்லகள்.

1999 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் கதாநாயகியாக சோனாலி பிந்த்ரே நடித்திருந்தார். ஹிந்தி சினிமாவில் கொடிகட்டி பரந்த இவர் காதலர் தினம் படம் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்தார். ஆனால், அதன்பிறகு இவரை எந்த தமிழ் சினிமாவிலும் காணமுடியவில்லை.

இந்நிலையில் கொடூர கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டார் சோனாலி பிந்த்ரே. இதனால் நடிப்புக்கு முழுக்கு போட்டு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார் சோனாலி. நோயின் தீவிரத்தால் தலைமுடியை இழந்து அதனை புகைப்படமாகி வெளியிட்டார். தற்போது ஆண்டவன் அருளால் புற்றுநோயில் இருந்து குணமாகி இந்தியா திரும்பியுள்ளார் சோனாலி.

இவளோ காலமாக நடிப்பிற்கு முழுக்கு போட்ட சோனாலி, தற்போது தான் மீண்டும் நடிக்க தயாராகிவிட்டதாக தனது சமூகவலைத்தள பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.


Advertisement