சினிமா

சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருகாங்க தெரியுமா?

Summary:

Actress shriya sharma current status and latest photos

நாம் சிறுவயதில் பார்த்த குழந்தை நட்சத்திரங்கள் இன்று படங்களில் கதாநாயகியாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டனர். அவர்களில் ஒருவர்தான் போத்தீஸ் விளம்பரத்தில் நடித்து பிரபலமானவர் ஷ்ரியா சர்மா. இமாச்சல பிரதேசத்தை பூர்விகமாக கொண்டவர். இவருடைய தந்தை ஒரு என்ஜினீயர் இவருடைய தாயார் ஒரு மருத்துவர்

தனது மூன்று வயதில் இருந்தே மாடலிங், சினிமா என கலக்கி வருகிறார். நடிகர் சூர்யா, ஜோதிகா நடித்து பிரபலமான திரைப்படம் சில்லுனு ஒரு காதல். இந்தப்படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவருக்கும் குழந்தையாக நடித்திருந்தார் ஷ்ரியா சர்மா. பின்னர் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான எந்திரன் படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் மிகவும் வளர்ந்து பெரிய பெண்ணாக மாறிவிட்டார் ஷ்ரியா சர்மா. தற்போது சினிமாவில் முன்னணி கதாநாயகியாக நடித்துவருகிறார். இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 


Advertisement