"பட வாய்ப்புக்காக தான் படுக்கைக்கு போறாங்க" நடிகை சங்கீதாவின் சச்சையான பேச்சு..Actress sangeetha controversy news

தமிழ் சினிமாவில் 90களில் ஆரம்ப காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக இருந்தவர் சங்கீதா. இவர் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். திருமணத்திற்கு பின்பு நடிப்பதிலிருந்து பிரேக் எடுத்துக் கொண்டார் சங்கீதா.

Sangeetha

இதனையடுத்து தற்போது மீண்டும் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்து ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் யூடியூப் சேனலிற்கு இவரளித்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அப்பேட்டியில் விஜயை குறிப்பிட்டு "அவர் எனக்கு அண்ணா மாதிரி எனக்கு ஒரு பிரச்சனை என்றால் அவர்தான் முதலில் கேட்பார்" என்று கூறியிருந்தார். இதனையடுத்து சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மெண்ட்களை குறித்து பேசினார்.

Sangeetha

அவர் பேசியது குறித்து, "சினிமாவில் நடிகைகளை யாரும் கையைப் பிடித்து இழுத்து படத்தில் நடிக்க வைப்பது இல்லை. பட வாய்ப்புக்காக தான் படுக்கை அறை வரைக்கும் நடிகைகள் செல்கிறார்கள். நாம் எப்படி பழகுகிறோம் என்பதை பொறுத்துதான் நம்மிடம் பழகுபவர்களும் நடந்து கொள்வார்கள்" என்று கூறி இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார்.