குத்தாட்டம் ஆட வேண்டாம்.. இத மட்டும் நீங்க பண்ணுங்க..! நடிகை சமந்தாவிடம் புஷ்பா படக்குழு பேச்சு வார்த்தை.....



Actress samantha acting in pudhpa2 movie

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறக்கும் அல்லு அர்ஜுன் நடிப்பில் அண்மையில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வரும் திரைப்படம் புஷ்பா. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருந்தார்.

மேலும் இந்த படத்தில் சமந்தா ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு கவர்ச்சியாட்டம் போட்டுள்ளார். இதனை தொடர்ந்து மீண்டும் புஷ்பா 2 படத்தில் சமந்தா நடனம் ஆடுவார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சமந்தாவிற்கு பதிலாக  பிரபல பாலிவுட் நடிகை திஷா பட்டாணி குத்தாட்ட பாடலுக்கு நடனம் ஆடுவார் என்று தகவல் சமீபத்தில் வெளிவந்தது.

இந்நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில், சமந்தா நடனம் ஆடவில்லை என்றாலும், முக்கியமான கதாபாத்திரத்தில் சமந்தாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.