20 வயதில் நடிகை ரெஜினாவின் வாழ்க்கையிலும் நடந்த மோசமான அனுபவம்! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!

20 வயதில் நடிகை ரெஜினாவின் வாழ்க்கையிலும் நடந்த மோசமான அனுபவம்! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!


actress-regina-talk-about-her-bad-experience

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ரெஜினா. இவர் இதற்கு முன்பு தனது 15 வயதில் பிரசன்னா மற்றும் லைலா நடிப்பில் வெளிவந்த கண்ட நாள் முதல் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து அவர் ராஜதந்திரம், மாநகரம், சரவணன் இருக்க பயமேன் என தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். 

மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் பார்ட்டி மற்றும் சிம்புதேவன் இயக்கி வரும் கசட தபர போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் செல்வராகவன் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்திலும் நடித்துள்ளார்.

regina

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் ரெஜினாவிடம் சினிமாவில் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்து கேட்டபோது அவர், அதுபோன்ற சம்பவம் எனக்கும் நடந்துள்ளது. எனக்கு ஒருவர் போன் செய்து பேசிக்கொண்டு இருந்தபோது அட்ஜெஸ்ட்மண்ட் செய்ய வேண்டும் என்று கூறினார். எனக்கு அப்போ 20 வயதுதான். அதனால் அவர் என்ன சொல்கிறார் என்று புரியவில்லை.

பின்னர் தான் எனக்கு அந்த அட்ஜெஸ்ட்மண்ட் வார்த்தையோட அர்த்தம் தெரிந்தது. பிறகு போனை கட் செய்துவிட்டேன். அதன்பிறகு நான் என் வாழ்வில் அது போன்ற நிகழ்வை சந்தித்தில்லை. சினிமா துறையில் மட்டுமில்லை எல்லா இடத்திலும் இதுபோன்ற பிரச்சினை உள்ளது. சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்யும் பெண்ணிடம் கேட்டால் கூட அவருக்கும் ஒரு கதை இருக்கும் அதுமாதிரியான உலகத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார்.