அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
கடலின் அழகை சீரழிக்கும் பிளாஸ்டிக்கை ஒழிப்போம்; நடிகை ரெஜினா விழிப்புணர்வு.!
கடந்த 2005 ம் ஆண்டு வெளியான கண்ட நாள் முதல் திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான நடிகை ரெஜினா கசான்ரா, அழகிய அசுரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, சரவணன் இருக்க பயம் ஏன், 7ம் அறிவு, கருங்காப்பியம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது நடிகர் அஜித்துடன் நடித்த விடா முயற்சி திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது. இயற்கை, சுற்றுசூழல் விஷயங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்ட நடிகை, அதனை எதிர்கால தலைமுறைக்கு தடையின்றி வழங்க வேண்டும் என பல விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், இன்று சென்னை மெரினா கடற்கரையில் பிளாஸ்டிக் இல்லாத கடற்கரையை உருவாக்குவோம் என்ற முனைப்புடன், அவர் தனது விழிப்புணர்வு பணியை மேற்கொண்டார். இதற்காக அவர் சிறிய ரக யோகார்டில் நின்றபடி பிளாஸ்டிக் இல்லாத கடலை உருவாக்க வேண்டுகோள் வைத்தார்.