நடு ஏரியில், ஒத்த ஆளாக நடிகை ரெஜினா செய்த காரியத்தை பார்த்தீர்களா! செம தில்லுதான்.. தீயாய் பரவும் வீடியோ!

நடு ஏரியில், ஒத்த ஆளாக நடிகை ரெஜினா செய்த காரியத்தை பார்த்தீர்களா! செம தில்லுதான்.. தீயாய் பரவும் வீடியோ!


actress regina boat riding video viral

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ரெஜினா. அதை தொடர்ந்து அவர் மாநகரம், சரவணன் இருக்க பயமேன் என தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். மேலும் இவர் கன்னடம், தெலுங்கு என பல மொழி சினிமாவிலும் முன்னணி நடிகையாக உள்ளார். 

மேலும் தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி, சக்ரா,கசட தபற உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. நடிகை ரெஜினா எப்போதும் தனது உடலை கட்டுக்கோப்பாக பராமரித்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.  அதனால் அவர் எப்பொழுதும் சுறுசுறுப்பான, கடினமான  உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருவார். மேலும் அவர் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.

இந்த நிலையில் ரெஜினா சமீபத்தில் படகு சவாரி மேற்கொண்டுள்ளார். இத்தகைய புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த அவர், நான் சிறியவளாக இருந்த போதே இங்கு வரவேண்டும் என்று மிகவும் ஆசைப்படுவேன். அந்த ஆசை தற்போது நிறைவேறிவிட்டது. மேலும் நான் உடற்பயிற்சி செய்யவும் இது மிகவும் உதவிகரமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.