அடேங்கப்பா.. நடிகை ரீமா சென்னுக்கு இவ்வளவு பெரிய மகனா! நீங்க பார்த்துருக்கீங்களா! வைரலாகும் புகைப்படம்!!

அடேங்கப்பா.. நடிகை ரீமா சென்னுக்கு இவ்வளவு பெரிய மகனா! நீங்க பார்த்துருக்கீங்களா! வைரலாகும் புகைப்படம்!!



Actress reema sen son photo viral

தமிழ் சினிமாவில் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த மின்னலே என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ரீமா சென். அதனை தொடர்ந்து அவர் விஜய், மாதவன், விக்ரம், விஷால், கார்த்தி என பல பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இவரது நடிப்பு பலராலும் பெருமளவில் பாராட்டப்பட்டது.

ரீமா சென் தமிழ் மட்டுமின்றி பல மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் ரீமா சென் கடந்த 2012-ல் சிவ் கரண் சிங் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டார். அதனை தொடர்ந்து அவர் சினிமாவிற்கு முழுக்கு போட்டார். இவர்களுக்கு 2013 ஆம் ஆண்டு ருத்ரவீர் சிங் என்ற மகன் பிறந்தார்.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்வார். இந்நிலையில் அவர் தற்போது தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனைக் கண்ட நெட்டிசன்கள் நடிகை ரீமா சென்னுக்கு இவ்வளவு பெரிய மகனா என ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.