நடிகை ராணி அளித்த பாலியல் புகாரில் திடீர் திருப்பம்...!
சினிமா துறையில் தற்போது நிறைய நடிகைகள் தங்களுக்கு பாலியல் தொல்லைகள் இருப்பதாக தெரிவித்து வருகிறார்கள். சமீபத்தில் பிரபல பின்னணி பாடகி சின்மயி அவர்கள் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது பிரபல திரைப்பட நடிகை ராணி சென்னை பாலியல் புகார் அளித்துள்ளார். இவர் நாட்டாமை படத்தில் டீச்சராக நடித்ததன் வெளியே தெரிந்தவர் நடிகை ராணி. இவர் நடிகர் விக்ரமின் ஜெமினி படத்தில் வரும் ஓ போடு பாடல் மூலம் திரையுலகில் பிரபலமடைந்தார்.
இந்நிலையில் பிரபல திரைப்பட நடிகை ராணி , சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் பிரபல துணை நடிகர் சண்முகராஜன் மீது பாலியல் புகார் அளித்துள்ளார் நடிகைராணி. துணிக்கடை விளம்பரத்தில் நடித்தபோது சண்முகராஜன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் அளித்துள்ளார் நடிகைராணி.
இந்நிலையில், நடிகை ராணி, துணை நடிகர் சண்முகராஜன் மீது அளித்த பாலியல் புகாரை திரும்ப பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நடிகை ராணி அவர் மீது பொய்யான குற்றச்சாட்டை அளித்துள்ளதாகவும், இதற்காக அவரிடம் நடிகை ராணி மன்னிப்பு கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.