கோல்டன் கேர்ள்...தகதகவென இருக்கும் நடிகை பூஜா ஹெக்டேவின் கவர்ச்சி புகைப்படம்!



Actress poojahegde  photo

 நடிகை பூஜா ஹெக்டேவின் கோல்டன் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில், ஜீவாவுக்கு ஜோடியாக முகமூடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாகி அறிமுகமாகி, இன்று தெலுங்கு சினிமாவில் டாப் நாயகிகளில் ஒருவராக இருப்பவர் நடிகை பூஜா ஹெக்டே.

தற்போது  அவரது கைவசம் பிரபாஸுடன் ராதே ஷ்யாம் சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா போன்ற படங்கள் உள்ளன. மேலும்   நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தளபதி 65 திரைப்படத்திலும் நடிக்கிறார் பூஜா ஹெக்டே.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்  வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் அவர் தற்போது  கோல்ட் கலர் கவர்ச்சி புகைப்படம் ஒற்றை வெளியிட்டு கோல்டன் கேர்ள் என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.