ப்பா.. 55 வயசுலயும் வேற லெவல்! பீச்சில் செம ஸ்டைலாக நடிகை நதியா! இந்த புகைப்படத்தை பார்த்தீங்களா!!

ப்பா.. 55 வயசுலயும் வேற லெவல்! பீச்சில் செம ஸ்டைலாக நடிகை நதியா! இந்த புகைப்படத்தை பார்த்தீங்களா!!


actress-nathiya-latest-photos-viral

தமிழ் சினிமாவில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நதியா. 80, 90'ஸ் காலகட்டத்தில் பிரபு, சுரேஷ், மோகன் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் இணைந்து நடித்துள்ள அவர் இளைஞர்களின் கனவு கன்னியாக விளங்கினார். மேலும் பெண்களும் அவருக்கு பெரும் ரசிகர்களாக இருந்தனர்

நதியா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு  மற்றும் மலையாளம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.  நடிகை நதியா நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் அம்மாவாக நடித்ததன் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். மேலும் தற்போதும் துள்ளலான இளமையுடன் சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் யங் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது பீச்சில் செம ஸ்டைலாக அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.