சினிமா

நாகினி நடிகை மௌனி ராய்க்கு இப்படி ஒரு சோகமான நிகழ்வா? வெளியான அதிர்ச்சி வீடியோ.

Summary:

Actress mouni rai car accident

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற தொடர்களில் ஓன்று  நாகினி. ஹிந்தியில் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த தொடர் தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பானது.

இந்த தொடரின் மாபெரும் வெற்றிக்கு காரணம் அந்த தொடரில் நாயகியாக நடித்த நடிகை மௌனி ராய்தான். இவருக்கென்று பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. நாகினி தொடருக்கு பிறகு தற்போது ஹிந்தி படங்களில் நாயகியாக நடித்துவருகிறார் நடிகை மௌனி ராய்.

இந்நிலையில் சமீபத்தில் மும்பையில் ஜூஹூ சிக்னல் அருகே காரில் சென்றுள்ளார் மௌனி ராய். அப்போது மும்பை மெட்ரோ ரயில் வேலை நடைபெறும் பாலம் அருகே அவர் கார் செல்லும்போது மிகப்பெரிய கல் ஓன்று அவரது காரின் மீது விழுந்ததில் காரின் கண்ணாடி உடைந்தது.

கல் காரின் மீது விழுந்ததால் ஆபத்து இல்லாமல் தப்பித்த அவர் இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஒருவேளை கல் அந்த பாதையில் நடந்து செல்பவர்கள் மீது பட்டிருந்தால் என்னவாயிருக்கும்? என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 


Advertisement