சினிமா

எம்புட்டு அழகான ஜோடி!! தனுஷ் பட கியூட் நடிகைக்கு விரைவில் டும்டும்டும்! கண்ணுபடவைக்கும் ப்ரீ வெட்டிங் வீடியோ!!

Summary:

தமிழ் சினிமாவில் நெஞ்சம் துணிவிருந்தால் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் மெஹ்ரின

தமிழ் சினிமாவில் நெஞ்சம் துணிவிருந்தால் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் மெஹ்ரின் பிர்சாதா. அதனைத் தொடர்ந்து அவர் விஜய் தேவரகொண்டாவுடன் நோட்டா, தனுஷின் பட்டாஸ் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, பஞ்சாபி என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை மெஹ்ரீனுக்கு பாவ்யா பிஷ்னோய் என்பவருடன் திருமணம் செய்ய பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு அண்மையில் ஜெய்ப்பூரில் உள்ள Alila Fort Bishangarh அரண்மனையில்  கோலகலமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
பாவ்யா பிஷ்னோய்யின் தந்தை குல்தீப் பிஷ்னோய் ஹரியானா மாநிலத்தின் அதம்பூர் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏவாக உள்ளார்.

மேலும் இவர்களது திருமணம் விரைவில் நடைபெறருக்கும் நிலையில் ப்ரீ வெட்டிங் வீடியோ ஷூட்  நடைபெற்றுள்ளது. அத்தகைய க்யூட் வீடியோவை மெஹ்ரின் பிர்சாதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நிலையில் , ரசிகர்கள் பலரும் அந்த அழகிய திருமண ஜோடிக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். மேலும் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement