அவருக்கு ரசிகையாக இல்லைனா பலாத்காரம் செய்யப்படுவீங்க! மாஸ் ஹீரோவின் ரசிகர்கள் மீது பிரபல நடிகை ஆவேச புகார்! - TamilSpark
TamilSpark Logo
சினிமா

அவருக்கு ரசிகையாக இல்லைனா பலாத்காரம் செய்யப்படுவீங்க! மாஸ் ஹீரோவின் ரசிகர்கள் மீது பிரபல நடிகை ஆவேச புகார்!

தமிழ் சினிமாவில் அன்பே ஆருயிரே, ஜாம்பவான், லீ, மருதமலை உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நிலா.  இவரது உண்மையான  பெயர் மீரா சோப்ரா. இவர் பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவின் சகோதரி ஆவார். இவர் தமிழ் மட்டுமின்றி  தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற படங்களிலும் பிசியாக நடித்து வந்துள்ளார்.

இந்நிலையில், ஊரடங்கால் சமூகவலைதளங்களில் பிசியாக இருக்கும் மீரா சோப்ரா சமீபத்தில்  ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.  அப்பொழுது ரசிகர் ஒருவர்  உங்களுக்கு பிடித்த நடிகர் யாரென கேட்டநிலையில் அவர் மகேஷ் பாபு என பதிலளித்துள்ளார். இந்நிலையில் நடிகர் ஜூனியர் என். டி. ஆர் ரசிகர்கள் மீரா சோப்ராவை கண்டபடி திட்டியுள்ளனர். மேலும் மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நொந்துபோன நடிகை மீரா அந்த பதிவுகளை  ஜூனியர் என். டி. ஆருக்கு டேக் செய்து, உங்களை விட மகேஷ்பாபுவை எனக்கு பிடிக்கும் என்றதால் என்னை ஆபாச நடிகை என  அநாகரிகமாக அழைக்கிறார்கள். இப்படிப்பட்ட ரசிகர்களை வைத்துக்கொண்டு நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? எனது பதிவை உதாசீனப்படுத்த மாட்டீர்கள் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் ஒருவரின் ரசிகராக இல்லாமல் இருப்பது மிகபெரிய  குற்றம் என எனக்கு தெரியாது. நான் அனைத்து பெண்களுக்கும் சத்தம் போட்டு ஒன்றை கூறிக் கொள்கிறேன் .நீங்கள் ஜூனியர் என்டிஆரின் ரசிகையாக இல்லை என்றால் நீங்கள் பலாத்காரம் செய்யப்படலாம், கொலை செய்யப்படப்படலாம், அல்லது அவர்கள் கூறியதுபோல உங்கள் பெற்றோர்கள் அவரது ரசிகர்களால் கொல்லப்படலாம் என கோபத்துடன் பதிவிட்டிருந்தார்.

மேலும்  தன்னை படுஆபாசமாக திட்டியவர்கள், பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது ஐதராபாத் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். மேலும் அந்த நபர்களின் டுவிட்டர் கணக்குகளை முடக்கும்படி ட்விட்டர் நிர்வாகத்திடமும் கோரிக்கை வைத்துள்ளார்.

 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo