அதை மட்டும் கேட்காதீங்க.! நடிகை மீனா வெளியிட்ட சூப்பர் கியூட் வீடியோ!! குவியும் லைக்ஸ்கள்!!actress-meena-video-viral

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் ஹீரோயினாக அவதாரமெடுத்து மக்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகை மீனா. அவர் ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார், விஜயகாந்த், பிரபு, அஜித் என பல  பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் முன்னணி நடிகையாகவும், இளசுகளின் கனவுநாயகியாகவும் வலம் வந்தார்.

இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு சில காலங்கள் சினிமாவில் இருந்து நடிகை மீனா விலகி இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் களமிறங்கி அவர் பல படங்களில் முக்கிய துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவர் அண்மையில் ரஜினி நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். 

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மீனா தற்போது அனைவரும் ரசிக்கும் வகையில் கியூட்டான வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது அவர் இணையத்தில் பரவி வரும் சேலஞ்ச் ஒன்றை செய்து அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். மேலும் அதில் அவர் இதனை செய்ய எவ்வளவு நேரம் ஆச்சுனு மட்டும் கேட்காதீங்க என ஜாலியாக பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.