நான் அந்த மாதிரி விஷயங்களை பண்ணியதற்கு விக்ரம் தான் காரணம்.. நடிகை மாளவிகாவின் வெளிப்படையான பேட்டி.?
நான் அந்த மாதிரி விஷயங்களை பண்ணியதற்கு விக்ரம் தான் காரணம்.. நடிகை மாளவிகாவின் வெளிப்படையான பேட்டி.?

தமிழ் சினிமாவில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தை பா ரஞ்சித் இயக்கி வருகிறார். இப்படத்தில் பார்வதி மற்றும் மாளவிகா மோகன் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
சமீபத்தில் 'தங்கலான்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த மாளவிகா மோகனின் சிலம்பம் பயிலும் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே 'தங்கலான்' திரைப்படத்தை குறித்த எதிர்பார்ப்பு அதிகமானது. இதனையடுத்து தற்போது மாளவிகா மோகனன் பேட்டி ஒன்றில் தங்கலான் குறித்து சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்து உள்ளார்.
அப்பேட்டியில் பத்திரிக்கையாளர்கள் பலர் கேட்ட கேள்விக்கு தொடர்ந்து பதிலளித்துக் கொண்டிருந்த மாளவிகா மோகனனிடம் விக்ரம் பற்றி கேட்டபோது அவரால் மட்டுமே இந்த கடினமான பயணத்தை என்னால் கடக்க முடிந்தது. சக நடிகர்களை எப்போதும் ஊக்குவித்து கொண்டே இருப்பார். தனது நகைச்சுவை உணர்வால் படப்பிடிப்பு தளத்தை எப்போதும் சிரிப்புடனே வைத்திருப்பார் என்று விக்ரமை பற்றி பெருமையாக மாளவிகா மோகனன் கூறி இருக்கிறார்.