ஏன் என்னாச்சு இவருக்கு...அகோரியாக மாறிய பிரபல நடிகை, வெளியான புகைப்படத்தால் அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்.!
தமிழில் இயற்கை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் குட்டி ராதிகா இவர் மேலும் வர்ணஜாலம், மீசை மாதவன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்..
மேலும் சரியான படவாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தெலுங்கு, கன்னட படங்களில் நடித்த குட்டி ராதிகா தற்போதைய கர்நாடக முதல்–மந்திரி குமாரசாமியை , 2006 ஆம் ஆண்டு ரகசியமாக திருமணம் செய்துகொண்டுள்ளார் என கூறப்படுகிறது.மேலும் இவர்களுக்கு ஷாமிகா என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் சினிமாவை விட்டு விலகி இருந்த குட்டி ராதிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் தயாராகும் ‘பைராதேவி’ என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் குட்டி ராதிகா அகோரியாக நடிக்கிறார்.
சடைமுடி, உடல் முழுக்க திருநீறு, கையில் சூலாயுதம், கழுத்தில் ருத்திராட்ச மாலை என்று வித்தியாசமாக இருக்கும் அவரது தோற்றத்தை படக்குழுவினர் தற்போது வெளியிட்டு உள்ளனர்.
அவரது தோற்றம் ரசிகர்களை பெரிதும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
மேலும் இதற்கான படப்பிடிப்பு காசியில் நடைபெறுகிறது