நடிகை குஷ்புவிற்கு சிறுவயதிலேயே தந்தையால் நடந்த கொடுமை.. திருமணத்திற்கு கூட அழைக்காத காரணம் இதுதானாம்..!! 



Actress Kushboo Father

நடிகை குஷ்புவின் இயற்பெயர் நக்கர்த் கான். இவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் 1970-ல் செப்டம்பர் 29ஆம் தேதி பிறந்தார். தொடக்கத்தில் சினிமாவின் மீது எவ்வித ஆசையும் இல்லாமல் வளர்ந்து வந்த குஷ்பூ, அவரது சகோதரரின் நண்பர் மூலமாக திரைத்துறையில் அறிமுகம் செய்யப்பட்டார்.

1980-லேயே குழந்தை நட்சத்திரமாக வாழ்க்கையை தொடங்கிய குஷ்பூ, டிவி இல்லாத ஒரு வீட்டில் இருந்து வளர்ந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. படங்களில் நடிக்க தொடங்கியதும் அதில் வரும் வருமானம் போதுமான அளவு இருந்தாலும் குஷ்பூவின் தந்தை வீட்டிற்கு செலவுக்கு பணம் கூட கொடுக்காமல் அனைத்தையும் செலவு செய்து வந்துள்ளார்.

Actress Kushoo

இந்த தகவல் திரைத்துறையினரின் காதுகளுக்கு செல்லவே, அந்த பணத்தை தயாரிப்பாளர்கள் குஷ்பூவிடம் ஒப்படைத்துள்ளனர். அதுவரை வருமானம் பார்த்த தந்தை பணம் கேட்டு மகளிடம் தொல்லை செய்யவே, தனது மகளின் கார் கண்ணாடியை அடித்து நொறுக்குவது, அவதூறாக பேசுவது என இருந்துள்ளார்.

இப்படியான சுயநலம் பிடித்த தந்தையின் நிலை கண்டு வளர்ந்த நடிகை குஷ்பூ, அவரை விட்டு பிரிந்து வந்துள்ளார்.அதன் பின்னர் தந்தையை சந்திக்காமல் அவரின் திருமணத்திற்கு கூட தந்தையை அழைக்காத குஷ்பூ, 1989-ல் தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டார்.

Actress Kushoo

தொடர்ந்து 90sகளில் முன்னணி நடிகையாகவும் அவர் இருந்து வந்ததையடுத்து, கன்னடம், மலையாளம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார் குஷ்பூ. தான் நடித்து வந்த காலத்தில் அவருக்கென ரசிகர் பட்டாளம் இருந்தது. மேலும், குஷ்புவுக்கு சிலை, கோவில் என்று ரசிகர்கள் தரப்பிலிருந்து வைக்கப்பட்டிருந்தது. 

இப்படி சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகை குஷ்பு, சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணத்திற்கு பின் திரைப்படங்கள் நடிப்பதை குறைத்து வந்தார். தற்போது தமிழ் தொலைக்காட்சியின் தொகுப்பாளினியாகவும், நடுவராகவும் இருக்கிறார்.